அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும்
27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக்கோயில்கள்

இயற்கையிலேயே பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் தோன்றி, ஜீவசக்தியுடன் விளங்குபவை விருட்சங்கள் (மரங்கள்). இயற்கையாகவே மனிதனின் பாவ கதிர்களை கிரகிக்கின்ற சக்தி விருட்சங்களுக்கு உண்டு. மனிதன் பிறக்கும்போது 27 நட்சத்திரத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறக்கிறான். அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது வாழ்க்கைக்கும் நட்சத்திரத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஒவ்வொரு நட்சத்திற்கும் ஒவ்வொரு விருட்சங்களும், அதிதேவதைகளும் உள்ளது. அவர்களை வணங்கினால் வாழ்க்கையில் எல்லா வளமும் கிடைக்கும். அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ற விருட்சங்களை நட்டு வளர்த்து வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்பது தின்னம். அதனால் தான் தெய்வங்கள் தவம் செய்யும்போது தவம் செய்யும் இடத்திற்கு மேற்கூரை அமைக்காமல் விருட்சங்களின் நிழலிலேயே தவம் செய்துள்ளார்கள்.

இறைவன் குருமூர்த்தியான தக்ஷிணாமூர்த்தி, ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், சன்யாசிகள், சாதுக்கள், மோட்சம், ஞானம் வேண்டுவோர்கள் விருட்சத்தின் நிழலில் தான் விரும்பி தவம் செய்கிறார்கள். அதை விளக்கும் வகையில் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் ஸ்தல விருட்சம் இருக்கிறது.

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள நட்சத்திர விருட்சங்கள்:

அஸ்வனி - எட்டி, பரணி - நெல்லி, கிருத்திகை - அத்தி, ரோகிணி - நாவல், மிருகசிரிஷம் - கருங்காலி, திருவாதிரை - செம்மரம், புனர்பூசம் - மூங்கில், பூசம் - அரசு, ஆயில்யம் - புன்னை, மகம் - ஆலம், பூரம் - புரசு, உத்திரம் - அலரி, அஸ்தம் - வேலம், சித்திரை - வில்வம், சுவாதி - மருதம், விசாகம் - விளா, அனுஷம் - மகிழம், கேட்டை - குட்டிபலா, மூலம் - மாமரம், பூராடம் - வஞ்சி, உத்திராடம் - பலா, திருவோணம் - வெள்ளை எருக்கு, அவிட்டம் - வன்னி, சதயம் - கடம்பு, பூரட்டாதி - தேமா, உத்திரட்டாதி - வேம்பு, ரேவதி - இலுப்பை.

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள நட்சத்திர அதிதேவதைகள்:

அஸ்வினி - அஸ்வினி தேவர்கள், பரணி - எமன், கிருத்திகை - அக்னி, ரோகிணி - பிரம்மா, மிருகசிரிஷம் - சந்திரன், திருவாதிரை - ருத்ரன், புனர்பூசம் - அதிதி, பூசம் - குரு, ஆயில்யம் - ஆதிசேசன், மகம் - பித்ரு, பூரம் - பகன், உத்திரம் - அதிமா, அஸ்தம் - சூரியன், சித்திரை - விஸ்வகர்மா, சுவாதி - வாயு, விசாகம் - இந்திரன், அனுஷம் - மித்ரன், கேட்டை - தேவேந்திரன், மூலம் - நிருதி, பூராடம் - நதியா, உத்திராடம் - விச்வே தேவர்கள், திருவோணம் - விஷ்ணு, அவிட்டம் - வசுதேவர், சதயம் - வருணம், பூரட்டாதி - அஜன், உத்திரட்டாதி - அகிர்புத்நியன், ரேவதி - பூஷா.

பலன்கள்:

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள 27 நட்சத்திர அதிதேவதைகள், 27 நட்சத்திர விருட்சங்கள் அவரவர் ஜென்ம நட்சத்திர அதிதேவதை மற்றும் விருட்சத்தினை அறிந்து வழிபடுபவர்களுக்கு சகலவிதமான தோஷங்கள், பாபங்கள் அகலும், நிம்மதி உண்டாகும், வாழ்க்கை சிறப்புற மேம்படும். முப்பிறப்பில் செய்த பாபம், இப்பிறப்பில் செய்த பாபம், நாகதோஷம், கிரக தோஷம், லக்ன தோஷம், மகா திசையினால் உண்டாகும் சங்கடங்கள் விலகும். பிதுர்தோஷம் நீங்கும், திருமண தடை அகலும், சத்புத்திர சந்தானம் உண்டாகும், நம் வாழ்வில் ஏற்படுகின்ற சகலவித பிரச்னைகள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்ததும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான 27 நட்சத்திர விருட்சங்களும், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் திருக்கோயில் காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கூர் கூட்டு சாலை அருகில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தென்கிழக்காக கூழமந்தல் ஏரிக்கரையின் அருகில் ஆகம விதிப்படி நடுநாயகனாக நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வர பகவான், ராகு-கேது அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சம் ஆகும். குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரவர் நட்சத்திர அதிதேவதை மற்றும் விருட்சங்களை வணங்கி அனைத்து வளங்களும் பெறலாம்.

இன்றைய நாள்
Special Poojas
தினசரி நித்திய பூஜை விநாயகர் , ராகு - கேது , சனீஸ்வரன் , அன்றைய நட்சத்திர அதிதேவதைகள்

பிரதி மாதம் சிறப்பு சங்கடஹர சதுர்த்தி பூஜை

வெள்ளி கிழமை சிறப்பு பூஜை

சித்திரை - சித்திரா பௌர்ணமி

வைகாசி - விசாக நட்சத்திர பூஜை

ஆனி - மூலம் , உத்திரம்

ஆடி - கிருத்திகை

ஆவணி - விநாயக சதுர்த்தி , அவிட்டம் , திருவோணம்

புரட்டாசி - சரஸ்வதி பூஜை, நவராத்திரி

ஐப்பசி - தீபாவளி

கார்த்திகை - திருக்கார்த்திகை

மார்கழி - ஆங்கில புத்தாண்டு

தை - 108 கோ பூஜை, காணும் பொங்கல், தை பூசம் , தை கிருத்திகை

மாசி - மகம்

பங்குனி - உத்திரம்

குரு பெயர்ச்சி

ராகு-கேது பெயர்ச்சி

சனி பகவான் பெயர்ச்சி

Temple Timings
Morning - 8am - 12pm

Evening - 4.30pm - 7.00pm

Bus Route
Kanchipuram to Vandavasi Road,
Bus Stop Name - Koozhamanthal & Ukkam perumbakkam.
Share Auto Available
View Map